இலங்கை ஆழ் கடல் பகுதியில் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      உலகம்
navy-corals 2019 07 08

கொழும்பு : இலங்கை கடல் பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறை ஆழ்க்கடல் பகுதியில் இந்த புதியவகை பவளப்பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆழ்க்கடல் பகுதிக்கு சென்ற இலங்கை வடக்கு பிராந்திய கடற்படையின் நீச்சல் குழுவினர் இந்த அழகிய பவளப்பாறைகளை கண்டுபிடித்துள்ளன.

ஏற்கனவே பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை பவளப்பாறைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்குப்பகுதி துணை தளபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வடக்குப்பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 400 மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்துள்ள பவளப்பாறைகளின் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த பவளப் பாறைகள் இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளினால் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து