முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ருசிகரம் - நேருக்கு நேர் விவாதம்நடத்திய போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இறங்கியுள்ள போரிஸ் ஜான்சனுக்கும், ஜெரேமி ஹண்டுக்கும் இடையே டி.வி.யில் நேருக்கு நேர் விவாதம் நடந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் தான் மேற்கொண்ட முயற்சிகளில் எல்லாம் தோல்வியை சந்தித்த பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெரேமி ஹண்டும் குதித்துள்ளனர். இந்த நிலையில் போரிஸ் ஜான்சனும், ஜெரேமி ஹண்டும் டி.வி. சேனல் ஒன்றின் ஏற்பாட்டில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த விவாதத்தின் போது அனல் வீசியது. ஒருவரை ஒருவர் மடக்குவதில் கவனம் செலுத்தினர்.

வடக்கு அயர்லாந்துக்கும், அயர்லாந்துக்கும் இடையேயான எதிர்கால எல்லை ஏற்பாடுகளில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தெரசா மே பெரிய தடுமாற்றத்துக்கு ஆளான நிலையில், தங்களால் தீர்வு காண முடியும் என இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். இப்படி தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு மடக்கியது பார்வையாளர்களுக்கு ருசிகரமாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து