ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Andhra-Chattisgarh new govenors 2019 07 16

புது டெல்லி : ஆந்திர மாநில கவர்னராக ஹரிசந்திரனும், சத்தீஸ்கர் கவர்னராக உய்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா கவர்னராக பா.ஜ.க.வை சேர்ந்த பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், ம.பி. மற்றும் சத்தீஸ்கர் மாநில கவர்னராக ஆனந்தி பென் படேல் வகித்து வந்தார். இந்த நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக பா.ஜ.க.வின் அனுசுயா உய்கே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து