சென்னை வண்ணாரப்பேட்டையில் தோட்டக்கலை பாரம்பரியப் பூங்கா: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை வண்ணாரப்பேட்டையில் தோட்டக்கலை பாரம்பரியப் பூங்கா ரூ.5 கோடி செலவில் 5.5 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களுக்கு அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தரமான இடுபொருட்களை சேமித்து விவசாயிகளுக்கு விநியோகிக்க, அம்மாவின் அரசு, இதுவரை 17 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளது. நடப்பாண்டிலும், 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய இம்மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை, மிக நீள இழை பருத்தி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளதாலும், இந்த ரகங்களை சாகுபடி செய்தால், பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்பதாலும், நடப்பாண்டில், மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணூட்டச் சத்தினை வழங்கவல்ல சிறுதானியப் பயிர்களை குறைந்த நீரில் சாகுபடி செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் குறைவான நிலப்பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும். எனவே, இப்பயிர்களின் சாகுபடியினை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில், தரமான விதை விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு தேவையான கைத்தெளிப்பான் விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சிகள் போன்ற பணிகளுக்காக நடப்பாண்டில் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும்.

கரும்பு விவசாயிகள், குறித்த நேரத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கூட்டுறவு சர்க்கரை ஆலை, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது தனியார் தொழில் முனைவோர் மூலம் இயந்திர வாடகை மையம் அமைக்க இயந்திரங்களுக்கான விலையில் 60 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் 40 சதவிகிதம் அரசு மானியமாக வழங்கி, தற்போது 11 வாடகை மையங்கள் இயங்குகின்றன. நடப்பாண்டில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாக கரும்பு சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்படும்.  இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து