முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து சேவாக், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இடையே கருத்து மோதல்

புதன்கிழமை, 17 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வான் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இந்த போட்டி குறித்து சேவாக் கூறுகையில், ஏற்கனவே இருந்து போக நியூஸிலாந்து அணிக்கு இந்திய ரசிகர்கள்  அதிகரித்துள்ளனர். இதற்கெல்லாம் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் தான் முக்கிய காரணம். இத்தனை இக்கட்டான தருணத்திலும் அவரது புன்னகையும், அமைதியும் பிரமிப்பாக உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி என்பதே இல்லை என்று கேன் வில்லியம்ஸனின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த டுவீட்டை ரீடுவீட் செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வான், கேன் வில்லியம்ஸன் தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விவகாரத்தில் வீரேந்திர சேவாக்கின் கருத்தை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஒரு விஷயம், இந்தப் போட்டிக்கு முடிவு உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இப்போட்டியை ''டை'' என அறிவித்து கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வரும் வேளையில் சேவாக்கும் அதை பிரதிபலித்துள்ளார். ஆனால், இந்தப் போட்டிக்கு முடிவு உள்ளது, இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று விட்டது என்பது போன்று மைக்கெல் வானின் கருத்து பிரதிபலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து