கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      இந்தியா
kerala rain 6 districts red alert 2019 07 17

திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கேரளாவில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர் மழையால் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பல அணைகள்  திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இந்த தொடர் மழைக்கு கேரள மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து