50 ஆண்டுகளாக கடற்கரை மணலில் புதைந்து கிடந்த கடிதத்துக்கு பதில் எழுதிய சிறுவன்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
beach sand boy 2019 07 21

சிட்னி : ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான 9 வயது சிறுவன் எலியட் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்து கிடந்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதை கண்டு எலியட் எடுக்கச் சென்றான். அருகே சென்று எடுத்து பார்த்த போது அது கடிதம் என தெரியவந்தது. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் 17-ம் தேதி, 1969-ம் ஆண்டு என இருந்தது.

அதை படித்த போது அந்த கடிதம், இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னுக்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன். யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள் எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது. இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோவுக்கு, எலியட் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளான். இந்த கடிதத்தை  எழுதும் போது கில்மோரோவுக்கு வயது 13. இப்போது அவருக்கு 63 வயதாகி விட்டது. இவர் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து