முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பேஸ் ஆப் செயலியால் மாயமானவர் 18 வருடத்திற்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பீஜிங் : சீனாவில் பேஸ் ஆப் செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.

சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக் காட்டும் பேஸ் ஆப் எனும் செயலிக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வரவேற்பு பெருகி வருகிறது. இந்நிலையில், சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்த போது காணாமல்போன நபர் ஒருவர் பேஸ் ஆப் செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

குவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங், 2001-ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனான். விசாரணையில் அவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் பேஸ் ஆப் செயலி மூலம், 3 வயதில் கடத்தப்பட்ட தங்களது மகனை கண்டறிய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி சிறுவயதில் எடுக்கப்பட்ட யு வீபெங்கின் புகைப்படங்கள் பலவற்றை தற்போதைய உருவத்திற்கு மாற்றி, போலீஸ் உதவியுடன் தேடினர். போலீசாரின் தீவிர முயற்சியில் யு வீபெங் கண்டுபிடிக்கப்பட்டார். போலீசார் அவரை அணுகி விவரத்தை எடுத்து கூறிய போது யு வீபெங் அதனை நம்பவில்லை. அதன் பிறகு அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர்தான் யு வீபெங் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து