முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

ஜம்மு : எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

சுந்தர்பேனி செக்டாரில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து மோர்டார்கள் சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த விவகாரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 3 தினங்களில் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து