முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27-வது நாள்: சாம்பல் நிற பட்டாடை அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க 27-வது நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 27-வது நாளான நேற்று சாம்பல் நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளம் பக்தர்கள் வரிசை இருந்தது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் அத்திவரதரை தரிசிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அத்திவரதரை தரிசித்த போது அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் அமைச்சர் தங்கமணி, பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜா உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். மனைவி, பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்துடன் வந்திருந்த அமைச்சர் தங்கமணி சிறப்புத் தரிசனம் செய்தார். கோயில் அர்ச்சகர்கள், அவருக்கு மாலையிட்டு வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து