எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.352 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் முதல் முறையாக ரூ. 20 ஆயிரத்தை எட்டியது. திடீரென அடுத்த இரண்டே நாள்களில் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ரூ. 21 ஆயிரத்தையும் தாண்டியது. இதையடுத்து வந்த ஆண்டுகளில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தது.பின்னர் கடந்த 2017-ம் ஆண்டில் ஏப்ரல் 30-ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 22 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 23 ஆயிரத்தையும், செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்தது. 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்குள் இருந்தது.
இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு பவுன் தங்கம் விலை முதல் முறையாக ரூ. 25 ஆயிரத்துக்கும் மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, ஆகஸ்ட் 1-ல் ரூ.26 ஆயிரத்து 480-க்கு விற்பனையானது. இந்த நிலையில் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 584 அதிகரித்து ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கு விற்கப்பட்டது.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை கடந்த சனிக்கிழமை மேலும் உயர்ந்தது. அதன் விலை வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.33 அதிகரித்திருந்தது. இதனால் பவுனுக்கு ரூ. 264 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 27 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 3 நாள்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 848 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் விலை உயர்ந்து தற்போது ரூ. 44.50 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3 நாட்களில் 50 டாலர் அதிகரித்து 1,452 டாலரை எட்டியுள்ள நிலையில், நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 352 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 3,460க்கும், ஒரு சவரன் ரூ. 27,680-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


