தங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      வர்த்தகம்
gold price rise 2019 06 12

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.28,944- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.3,618- க்கு விற்பனையானது.  அதே வேளையில் சென்னையில் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.48.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 26,480 ஆக இருந்தது. அதன் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த 12-ம் தேதி  சவரன் 28,824-க்கு விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 13 நாட்களில் சவரனுக்கு ரூ. 2536 அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது. இம்மாதம் இறுதிக்குள் தங்கம் சவரன் 30,000 தாண்டும் என்றும் தங்க வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென்று குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை 49 குறைந்து கிராம் 3,578-க்கு விற்பனையானது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 392 குறைந்து 28,624-க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து