Idhayam Matrimony

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2026      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 6 நாட்கள் மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- .தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்ற பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, 21-2-2026 முதல் 26-2-2026 வரை பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 21-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளுக்கு அம்பத்தூரில் பிரச்சாரம் நடைபெறுகிறது. 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரச்சாரம் நடக்கிறது.

25-ம் தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளுக்கு மாலை 5 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் பிரச்சாரம் நடக்கிறது. 26-ம் தேதி (வியாழக்கிழமை) தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு மாலை 4.30 மணிக்கு பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பிரச்சாரம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து