எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
சபுவா விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். திப்ருகரில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் உள்ள அவசர தரையிறங்கும் சாலையில் பிரதமர் நரேந்திர மோடி சி-130 விமானத்தில் தரையிறங்கியதால், அசாமில் இது ஒரு வரலாற்று தருணமாக மாறியது.
திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார். அவசரக் காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலாவது அவசர கால தரையிறங்கும் சாலை இதுவாகும்.
நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு இக்கட்டான சூழலின்போது போர் வீரர்கள் செல்வதற்கும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கும் மாற்று ஓடுபாதையாக செயல்படும். தொலைதூரப் பகுதிகளில் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது இது முக்கிய பங்காற்றும்.
போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படை நடத்தும் 40 நிமிட வான்வழி காட்சியையும் பிரதமர் மோடி கண்டு களித்தார். அதன்பின்னர், அவர் சி-130 விமானத்தில் அவர் குவாஹாட்டிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


