முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்ளே தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும்: சேவாக் விருப்பம்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த அனில் கும்ளே, தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே விமர்சனம் எழும்பிய வண்ணம் உள்ளன. இதற்கு எம்.எஸ்.கே. பிரசாத் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் அனில் கும்ளே தேர்வுக்குழு உறுப்பினராக வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ளே சரியான நபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கும்ளே சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர்களுடன் ஒரு வீரராகவும், இளைஞர்களிடம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரின் போது, கேப்டனாக இருந்த கும்ளே என்னுடைய அறைக்கு வந்து, நீங்கள் அடுத்த இரண்டு தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்றார். இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதில் வீரர்களுக்கு தேவை. தேர்வுக்குழு உறுப்பினருக்கான சம்பளத்தை அதகரிக்க பி.சி.சி.ஐ. முன்வரவேண்டும். அப்படி செய்தால் ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து