முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி விதிப்பு: சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க பொருட்களுக்கு 75 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா வரி விதித்துள்ளதைத் தொடர்ந்து, சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போர் நடந்து வருகிறது. தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள வர்த்தகப் போரினால் இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு கூடுதலாக 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனாவின் நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 ஆயிரத்து 78 பொருட்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் விவசாயப் பொருட்கள், சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி மற்றும் சிறிய ரக விமானங்களுக்கும் வரியை உயர்த்தப் போவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 5 அல்லது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இதனையடுத்து சீனாவில் இருந்து செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

உண்மையாகவே தங்களுக்கு சீனா தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் பணம் விரயமாவது அதிகரித்துக் கொண்டே போவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக மற்றொரு இடத்தைத் தேட தொடங்கி உள்ளதாகவும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து