கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Kohli-Anushka 2019 08 24

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இதையடுத்து விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி நடந்தது.

விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தற்போது விளையாடி வருகிறார். இதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள அவர், அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பேசிய கோலி, அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப்பெரிய வரம். மிகச்சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக கொடுக்கிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலின் தொகுப்பினை பகுதிகளாக பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து