முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார்.

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிவி சிந்து இந்த முறை எப்படியாவது தங்கம் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார்.ஆட்டம் தொடங்கியது முதலே பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிவி சிந்து படைத்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து