முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை,  உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள தமிழ்நாடு காவல்துறை, அதற்காக தயாரித்த எப்.ஐ.ஆர்-ல் "அஜித்குமார் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டுமுறைத் தப்பிக்க முயன்றதாகவும், அதில், இரண்டாவது முறை தப்பிக்கும்போது தவறி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், "உடலில் 18 இடங்களில் கொடும் காயங்கள் இருந்தன எனத் தெளிவான பிறகும், இப்படி ஒரு பித்தலாட்டமான எப்.ஐ.ஆர்-யைத் தயார் செய்துள்ளது  காவல்துறை. அதனால், அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை,  உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

மகனை இழந்து வேதனையில் தவிக்கும் அஜித்குமாரின் தாயாருக்கும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் பொதுமக்களுக்கும் எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாய் நிற்கும்! போராடும்! என ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து