முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட (நேற்று) மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று (நேற்று) முதல் 45 நாட்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. இன்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு முழுவதும், ஜூலை 3ம் தேதி முதல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்றுதிரட்டுவதே இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் நோக்கம். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காகவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

அப்போது மடப்புரம் கோவில் காவலர் உயிரிழப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட (நேற்று) மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து