5 அமெரிக்க ஆளுநர்கள் அடுத்த 2 மாதங்களில் இந்தியா வருகை

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      உலகம்
Harsh Vardhan 2019 09 04

ஐந்து அமெரிக்க ஆளுநர்கள் வரும் இரண்டு மாதங்களில் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அடுத்த இரண்டு மாதங்களில், அமெரிக்காவின் ஐந்து ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். வருகை தருபவர்கள் நியூ ஜெர்சி, ஆர்கன்சாஸ், கொலராடோ, டெலாவேர் மற்றும் இந்தியானா ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களாவர். இதுவரை 11 அமெரிக்க மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ள இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்த இது முக்கிய முயற்சியாகும் என்று தெரிவித்தார். அமெரிக்க ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் சிறந்த வணிகங்களின் வர்த்தக பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து அமெரிக்க ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது டிரம்ப் மற்றும் மோடி அரசாங்கத்தின் இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து