பிரதமர் மோடி- புடின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      உலகம்
Putin-Modi 2019 09 04

விளாடிவாஸ்டாக் நகரில் பிரதமர் மோடி- அதிபர் புடின் முன்னிலையில் இந்தியா-ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய ராணுவ வீரர்கள் வழங்கிய சிறப்பு அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார். விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புடினுடன் பிரதமர் மோடி சென்றார். தொடர்ந்து ஸ்வெஸ்டா சொகுசு கப்பலில் அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

மேலும் கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது மரபுகளை கடந்து தன்னுடன் இந்த கப்பல் கட்டும் தளத்துக்கு வந்து சுற்றிக்காட்டிய ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் விளாடிவாஸ்டாக் நகரில் இந்தியா-ரஷ்யா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பேசிய பிரதமர் மோடி, ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று. அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன.

இரு நாடுகளிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஏ.கே-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும். ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும். சென்னை - ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. பாதுகாப்பு, இசை, விண்வெளி ஆய்வு, எரிசக்தித் துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்கள் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து