முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: உத்தவ் தாக்கரே

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : அயோத்தியில் ராமர் கோயில் மோடியின் தலைமையின் கீழ் கட்டப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, பா.ஜ.க. - சிவசேனா தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அயோத்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதி கூறுகிறேன். மோடி இங்கு வரும் போது நான் எத்தனை முறை நன்றி சொல்வேன் என்று கேட்பேன்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது என பல நடவடிக்கைகள் மோடி அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்தார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து