முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்பார் படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது’ ரஜினி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      சினிமா
Image Unavailable

சென்னை : ‘தர்பார்’ திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றும், படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்றும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் ‘தர்பார்’. மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், நேற்று முன்தினம்  மாலை 6 மணியளவில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் பனியனுடன் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல் காணப்படுகிறது. இந்த படம் தற்போது அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும், படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.செகண்ட் லுக் போஸ்டரில் 2020 பொங்கலுக்கு தர்பார் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து