பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதுதான்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
Rajinikanth 2019 09 18

பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான், ஆனால் இந்தியை எங்கும் திணிக்கக் கூடாது நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவில்  பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன் என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவில் பொது மொழியை கொண்டு வர முடியாது. எனவே, எந்த மொழியையும் எங்கும் திணிக்க முடியாது. குறிப்பாக இந்தி மொழி தணிப்பை தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடக்கில் உள்ள பல மாநில மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து