முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.

உள்நாட்டில் டி.வி. உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இந்த வரிச்சலுகையை அளித்துள்ளது. இதன் தொலைக்காட்சி உற்பத்தி செலவு 3 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்ப்புள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 15.5 இன்ச் அளவுக்கு மேல் எல்.சி.டி, எ.இ.டி. டி.வி. பேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இறக்குமதி வரி 5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானசோனிக் நிறுவனம், தனது தொலைக்காட்சி விலையில் 4 சதவீதம் வரை விலை குறைப்பு செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பேனல்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்தியாவில் நிறுவிய தொலைக்காட்சி நிறுவனத்தை மூடி விட்டு சாம்ஸங் நிறுவனம் வியட்நாமுக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பேனலின் செலவு ஆகியவற்றால் தொலைக்காட்சிகளின் விலை உயர்ந்து, விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விற்பனை உயர வாய்ப்புள்ளது.

இது தவிர, பிலிம்களுக்கான சிப், சர்கியூட் போர்ட் அசெம்பிளி போன்றவை டி.வி.கள் தயாரிக்க பயன்படுகின்றன. அவற்றுக்கான சுங்க வரியையும் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து பண்டிகை காலம் தொடங்க இருப்பதால், மத்திய அரசின் இந்த சலுகையை வாடிக்கையாளர்ளுக்கு நிறுவனங்கள் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இது குறித்து எல்.ஜி. எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் கூறுகையில், மத்திய அரசின் அறிவிப்பு உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், சோனி நிறுவனமும், ஹேயர் நிறுவனமும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து