எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 188 கி.மீ. தொலைவில், வெள்ளிக்கிழமை (பிப். 27) மதியம் 1.30 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், வங்கதேசத்தின் நிலநடுக்கத்தால், மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இதனால், கொல்கத்தாவில் அதிர்வுகளில் சிக்கிய பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவின் வடகிழக்கில் மேற்கு வங்கத்தின் அருகில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்று மதியம் 12.02 மணியளவில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களிடையே மிகுந்த பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னதாக, வங்கதேசத்தில் கடந்த நவ. 21 அன்று ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


