எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ திங்கள்கிழமை (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் நடன்ஸ் யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. அணு அமைப்பில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஐஏயுஏ அமைப்பில் ஈரானின் தூதராக உள்ள ரெசா நஜாபி, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதல்களை நான் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரானின் அமைதியான மற்றும் பாதுகாப்பான அணு நிலையங்களை அவர்கள் நேற்றும் தாக்கினர். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது என்ற அவர்களின் கூற்று மிகப்பெரிய பொய்” என்று தெரிவித்தார். எனினும், அந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக ஈரானின் எந்த ஓர் அணு நிலையமும் சேதமடைந்ததாக தகவல் இல்லை என ஐஏஇஏ அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார். 35 நாடுகள் அடங்கிய நிர்வாக சபையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த அணு நிலையங்களும் சேதமடைந்ததாக அல்லது தாக்கப்பட்டதாக எங்களிடம் எந்தச் சான்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “ஈரானின் அணு ஒழுங்குமுறை அதிகாரிகளை தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


