முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கேப்டன் விராட் கோலி தனது 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவர், 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 22 அரைசதங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், 3 வகையான போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2008-ம் ஆண்டு விராட் கோலி விளையாட தொடங்கினார். அதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது விராட் கோலி தன்னுடைய 16 வயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விராட் கோலி பதிவிட்ட இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள். இது மட்டுமல்லாது இளம் வயது முதல் தற்போது வரை அவரது உருவத்தில் மட்டுமல்லாது, திறமையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து