முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில். இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் அவர் பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டு பெண்கள் மீது நடத்தப்பட்டு வரும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து, குலாலாய் இஸ்மாயில் மீது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. அவரை கைது செய்வதற்காக தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். கடந்த மே மாதம் முதல் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து தப்பி சென்று அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது நியூயார்க்கின் புரோக்லின் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வரும் குலாலாய் அமெரிக்கா சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளார். குலாலாய் மீண்டும் பாகிஸ்தான் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து