முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகள போட்டியில் தமிழக வீராங்கனைக்கு கடைசி நேர வாய்ப்பு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்கிறார். 200 மீட்டர் ஓட்டப்பிரிவில் கலந்து கொள்ள அவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 27-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை கத்தார் தலைநகர் தோதாவில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான இந்திய தடகள அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அணியில் 26 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்கிறார். 200 மீட்டர் ஓட்டப்பிரிவில் கலந்து கொள்ள அவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை சர்வதேச தடகள சம்மேளனத்திடம் இந்திய தடகள சம்மேளனம் பெற்றுள்ளது. ஹிமாதாஸ் காயத்தால் விலகி இருந்தார். மற்றொரு தமிழக வீராங்கனை தனலட்சுமி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அர்ச்சனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மதுரையை சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில் 200 மீட்டரை 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்று இருந்தார். இந்த ஆண்டில் 23.18 வினாடியில் ஓடியதே அவரது சிறந்த நிலையாகும். ஆனால் சர்வதேச அளவில் 20.40 வினாடி தான் தகுதி நிலையாக இருக்கிறது. உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் அர்ச்சனா ஆவார். தருண் அய்யாசாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார். அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து