விஜய் சங்கர் சூப்பர் ஆட்டம்: தமிழ்நாடு அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      விளையாட்டு
Vijay Shankar 2019 09 29

பாட்னா : பீகார் அணிக்கெதிராக விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாச, தமிழ்நாடு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபியில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பீகார் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் பாபுல் குமார் (110) சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பீகார் அணியால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களே சேர்க்க முடிந்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. ஜெகதீசன், அபிநவ் முகுசந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெகதீசன் 24 ரன்களிலும், அபிநவ் முகுந்த் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரி நிஷாந்த் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு பாபா அபரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபா அபரஜித் 52 ரன்களும், விஜய் சங்கர் 91 ரன்களும் ஆட்டமிழக்காமல் சேர்க்க தமிழ்நாடு 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்து 76 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணியையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து