முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானில் கோரத் தாண்டவம் ஆடிய ஹபிகிஸ் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்த போதே பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஹகிபிஸ் புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் ஜப்பானில் கனமழை பெய்தது. இந்தப் புயலும், பெருமழையும் கிழக்கு ஜப்பானில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை வெள்ளம் காரணமாக 42 லட்சம் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. 14 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புயலின் காரணமாக 12 பேர் காணாமல் போயினர் எனவும் 25 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் நேற்று காலை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 17-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 189 மக்கள் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து