சவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      உலகம்
Saudi bus crash 2019 10 17

ரியாத் : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  மதினா நகரில் இருந்து மெக்காவை இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்தில்  காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து