முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்?- டெல்லி- பெங்கால் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக டெல்லி - பெங்கள் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 132 ‘லீக்’ போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

உ.பி.யோதா, யு மும்பை, அரியானா ஸ்டீலர்ஸ, பெங்களூர் புல்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பிடித்து அரைஇறுதிக்கான ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்சுன் ஜெயின்ட்ஸ், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ்தலைவாஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

அரைஇறுதிக்கான ‘பிளேஆப்’பில் முதல் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி உ.பி. யோத்தாவையும், 2-வது வெளியேற்றுதல் சுற்றில் யு மும்பை அணி அரியானாவையும் தோற்கடித்தன.

இதன்மூலம் அரை இறுதிக்கு பெங்களூரு புல்ஸ், யு மும்பை தகுதி பெற்றன. முதல் அரைஇறுதியில் பெங்களூருவை தபாங் டெல்லியும், 2-வது அரைஇறுதியில் யு மும்பையை பெங்கால் வாரியர்சும் வீழ்த்தின.

சாம்பியன் மகுடத்துக்கான இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

ஜோகீந்தர் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணியில் நவீன்குமார் (285 புள்ளி), சந்திரன் ரஞ்சித் (123 புள்ளி), ரவீந்தர் பாஹல் நீரஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியதால் நம்பிக்கையுடன் உள்ளது.

பெங்கால் வாரியர்ஸ் அணியில் கேப்டன் மணீந்தர்சிங் 205 புள்ளிகள் எடுத்துள்ளார். அவர் காயம் காரணமாக அரை இறுதியில் ஆடவில்லை. இறுதிப்போட்டியில் ஆடுவதும் சந்தேகமே. சுகேஷ் ஹெக்டே, முகமது இஸ்மாயில் நபிபக்ஷா, பிரபஞ்சன், பல்தேவ்சிங் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். 

சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதுவதால் இறுதிப்போட்டி விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் ஆகஸ்ட் 17-ந்தேதி மோதிய ‘லீக்’ ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. செப்டம்பர் 30-ந்தேதி நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது.

இதுவரை பாட்னா பைரேட்ஸ் மூன்று முறையும் (2016-ம் ஆண்டு இரண்டு தடவை, 2017), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (2014), யு மும்பை (2015), பெங்களூரு புல்ஸ் (2018) தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து