தங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      வர்த்தகம்
gold rate 2019 09 14

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 29,328-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து  ரூ. 3,666 க்கு விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ. 49.20க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருவதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. பின்னர் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து விலையில் புதிய மைல்கல்லை எட்டியது. செப்டம்பரில் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்து நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 29,328-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ரூ. 3,666க்கு விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 49.20-க்கும், கிலோ ரூ.49,200-க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து