முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

ஈரோடு : பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் மேட்டூருக்கு பிறகு 2-வது பெரிய அணையான பவானி சாகர் வேகமாக நிரம்பி வருகிறது. ஓராண்டுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 148 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த உயரம் 105 அடி. நீர் இருப்பு 28.8 டி.எம்.சி. அணையிலிருந்து விநாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து