டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      தமிழகம்
doctorate cm edapadi speech 2019 10 20

சென்னை : டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கவுரவ டாக்டர் பட்டம்

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ். கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை, ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம், நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் வழங்கினர். மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ். ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் முதல்வர் பழனிசாமி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முதலிடம்

மனித சமுதாயத்திற்கு பணியாற்ற மாணவர்கள் உறுதியேற்க வேண்டும். மாணவர்களுக்கு கனிவு, பணிவு, துணிவு தேவை. பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும். ஒழுக்கம், நீதிபோதனை போன்றவற்றை அறிந்தவனே முழுமையான மனிதனாவான். முயற்சி திருவினையாக்கும். டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது. உயர்க்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6,800 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் 6 சட்ட கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு தொடங்கி உள்ளது. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். முயன்றால் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து