முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-ம் நாள் தேநீர் இடைவெளி வரை 4 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்து திணறியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை ரகானே மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய ரகானே சதமடித்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருக்கும் போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் தேனீர் இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. 5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், முகமது சமி மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்திய அணி 335 ரன்கள் முன்னிலை எடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது.

இதையடுத்து பாலோ-ஆன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், டீன் எல்கரும் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் குயிண்டன் டி காக் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸும் 4 ரன்களில் அவுட் ஆனார்.தற்போது, தேநீர் இடைவெளி வரை 9.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து