முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தொடரும் போராட்டங்கள்: அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடல்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாக்தாத் : ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் தீவிரக் கட்டத்தை எட்டியுள்ளன. தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அல் ஜசிரா கூறுகையில், ஈராக்கில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி போராட்டக்காரர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. சாலை மறியல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தொடர் வன்முறை காரணமாக ஈராக்கில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடபட்டுள்ளன. இதன் காரணமாக ஈராக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

ஈராக்கில் அக்டோபர் மாதம் தொடங்கிய இப்போராட்டத்தில் தற்போதுவரை 250 பேர் பலியாகியுள்ளனர். 2,000 - க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஈராக்கில் நடக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசின் தாக்குதலை ஷியா மத குருமார்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

முன்னதாக, ஈராக்கில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டுகிறது என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து