தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      விளையாட்டு
Tabitha 2019 11 06

குண்டூர் : தேசிய ஜூனியர் தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 13.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்று இருந்தார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து