முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளர்ச்சிப்படைகள் நடத்திய தாக்குதல் - தாய்லாந்தில் 15 பாதுகாவலர்கள் பலி

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாங்காங் : தாய்லாந்து நாட்டின் எல்லையோர சோதனைச்சாவடியில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய தாக்குதலில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.

தாய்லாந்து நாட்டில், மலேசியா எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருகின்றன. சர்ச்சைக்குரிய அப்பகுதிகளில் தாய்லாந்து ராணுவமும், பொதுமக்களை பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள யாலா மாகாணத்தில் உள்ள இரு சோதனைச் சாவடிகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். சோதனைச் சாவடியில் எதிர்பாராத விதமாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர். மேலும் சோதனைச்சாவடியில் இருந்த எம்-16 மற்றும் சில கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து சோதனை சாவடி இருந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது  என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், கடந்த 15 ஆண்டுகளில் 7000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து