முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இலங்கையில் வருகிற 16-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  பிரேமதாசாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நான்கு கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்கள் நாட்டின் மிகப்பெரிய தேர்தலில் இரண்டு வாரங்களுக்குள் வாக்களிக்க உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் வாக்களிக்க கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். மொத்தம் 1.6 கோடி இலங்கை மக்கள் நாட்டின் மிகப்பெரிய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து