முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வெங்காயம் விலை ரூ.100 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

டெல்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100- ஐ தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.  

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பதுக்கல் காரணமாக தட்டுப்பாடு நிலவுவதால் விலை உயர்ந்த வண்ணமாய் உள்ளது.

மற்ற மாநிலங்களில் வெங்காயத்தின் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.  டெல்லியில் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதால் தான் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.  வெங்காய விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பதுக்கல்காரர்களை பா.ஜனதா அரசு பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து