நான் தி.மு.க.வில் உறுப்பினர் கூட இல்லை. மு.க.அழகிரி

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      தமிழகம்
MK Alagiri 2018 8 14

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து மு.க.அழகிரியிடம் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

மேலும் நான் தி.மு.க வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும் அவர் கூறினார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

இதையொட்டி மு.க.அழகிரி நேற்று  காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து