Idhayam Matrimony

போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 28ம் தேதி இரவு 11.55 மணியில் இருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவி கோரி அழைத்த 974 இந்தியர்களில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோல், ஐயக்கிய அரபு-253, பக்ரைன்-95, கத்தார்-66, சவுதி அரேபியா-13, சிங்கப்பூர்-25, ஓமன்-6 என தமிழர்கள் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளனர்.

உதவிகோரி அழைத்த 498 நபர்களும் தொழில் ரீதியாகவும், சுற்றுலாவிற்கும் சென்று சிக்கியர்கள் என விளக்கம் அளித்துள்ளது. உதவிகோரிய அனைவருக்கும் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளது. உறவினர்கள் யாரும் பதற்றமோ அல்லது அச்சம் கொள்ளத்தேவை இல்லை எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து