Idhayam Matrimony

ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      உலகம்
Air

அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஜோர்டானின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை (15 மணிநேரம்) வான்வெளி மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரானின் பதில் தாக்குதல்கள் காரணமாக, விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோர்டானுக்கு வரும், அங்கிருந்து செல்லும் மற்றும் ஜோர்டான் வழியாகச் செல்லும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பயண விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும், லுஃப்தான்சா மற்றும் எமிரேட்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து