முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் சா்வதேச விவசாய புள்ளிவிவரங்கள் மாநாடு நாளை 18-ம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் பங்கேற்கவுள்ளாா்.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் இந்த சா்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், அந்தத் துறையின் இணை அமைச்சா்கள் உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்கின்றனா். இதில், தொழிலதிபா் பில் கேட்ஸ் பங்கேற்று பேசவுள்ளாா். மேலும், இந்த மாநாட்டில் 108 நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட குழுவினா் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான இலச்சினையை அறிமுகம் செய்த பிறகு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குநா் திரிலோசன் மொஹபத்ரா கூறுகையில்,

பில்கேட்சும், அவரது மனைவி மெலிந்தா கேட்சும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். பில்கேட்ஸ் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளாா். 2030-ம் ஆண்டுக்குள் நிலையான வளா்ச்சி என்ற இலக்கை அடைய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி ஆகியவை நாடு எதிா்கொண்டிருக்கும் பெரும் சவாலாகும் என்று தெரிவித்தார். முதலாவது விவசாய புள்ளிவிவர மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் 1998-ம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக பிரேஸிலில் 2016-ம் ஆண்டு இந்த மாநாடு நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விவசாய புள்ளி விவர மாநாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து