முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு - சீன அரசு ஆவணங்கள் கசிந்தன

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கசிந்த சீன அரசு ஆவணங்களை வைத்து தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கூறும் போது, சீனாவின் மேற்கு சின் ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர், இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கடும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளன என்று தெரிவித்துள்ளனர். கசிந்த இந்த ஆவணங்களை சீன அரசியல் வட்டார உறுப்பினர் ஒருவரால் வெளியே கசிந்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் 2014-ம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் இப்பகுதிக்குச் சென்று அதிகாரிகளிடம் பேசிய போது, அதாவது ரயில் நிலையம் ஒன்றில் உய்குர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதையடுத்து அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளை சந்தித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அப்போது, பயங்கரவாதம், பிரிவினை வாதம், ஊடுருவல் ஆகியவற்றுக்கு எதிராக எந்த வித கருணையுமின்றி, எதேச்சதிகாரத்தின் அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்துங்கள் என்று அதிபர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனால் 403 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் எப்படி சேகரிக்கப்பட்டன, எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது தெரியவில்லை என்று அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சீன அயலுறவு அமைச்சகத்துக்கு பதில் கேட்டு அனுப்பிய பேக்ஸ் செய்திக்கு இன்னும் பதில் வரவில்லை. அப்பகுதியின் கட்சித் தலைவராக சென் குவாங்க்வோ 2016-ல் நியமிக்கப்பட்ட பிறகே தடுப்புக் காவல் முகாம்கள் விரிவாக்கம் பெற்றதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன, இதே குவாங்வோதான் திபெத்தில் நியமிக்கப்பட்டிருந்த போது கடும் அடக்குமுறை நடவடிக்கைகளை திபெத்தியர்களுக்கு எதிராக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து