முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கூட்டணி கட்சி ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் அம்ஜத் கான் வரவேற்று பேசினார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஜெமில்கான், மண்டபம் ஒன்றிய செயலாளர் சரவணன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி. திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், ராமேஸ்வரம் நகர செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிக்குழு அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும், வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ள பகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க ராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் கிராமம் தோறும் சென்று 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக ஒரு கிலோ அரிசி வழங்கி பிளாஸ்டிக் இல்லா ராமநாதபுரத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஒரு சதவீத வட்டிக்கு கடன் கொடுப்பதாக கூறி மக்களின் வீடு மட்டும் நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு பிறகு கூட்டு வட்டி வட்டிக்கு வட்டி என்று ஏமாற்றி மக்களிடம் அதிகமாக பணத்தை அபகரித்து வருகின்றனர். மேலும் அடியாட்களை கொண்டு ஆண்கள் இல்லாத நிலையில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டில் சென்று மிரட்டுவதும் ஆபாசமான வார்த்தைகள் பேசுவதும் நடந்துகொண்டு வருகிறது. இப்படி கடன்பட்டு கலங்கி நிற்கும் மக்களை ஒன்று திரட்டி இந்த மோசடி நிறுவனங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆயிஷா நன்றி கூறினார். கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளின் பட்டியலை பெறப்பட்டது. இந்த பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து